இந்திய அணிக்கு சவால் விடுத்த அவுஸ்திரேலிய வீரர்! இந்தாண்டு சுற்று பயணத்தில் இந்தியாவின் நிலை?

Capture 1
Capture 1

அவுஸ்திரேலியா அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன் இந்தியாவிற்கு சவால் விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியா அணியின் சிறந்த வேகப்பந்து வீசாளர்களில் ஒருவர் ஜேம்ஸ் பட்டின்சன். 29 வயதான இவர் கடந்த 2011-ல் பிரிஸ்பேனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். 21வயதில் களம் இறங்கிய பட்டின்சன், அறிமுக போட்டியிலேயே 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஆனால், இவர் முதுகு வலி பிரச்சனை காரணமாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது. எனவே இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இடம் பிடித்து வந்தார்.

ஆஷஸ் தொடரில் விளையாடிய பட்டின்சன் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் இடம் பிடித்தார். மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதை பயன்படுத்தி 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

முன்னதாக இந்திய கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டது. அப்போது, அந்த அணி முழு வலிமையுடன் இல்லை. தற்போது ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோருடன் வலிமையாக உள்ளது.

எனவே இந்த ஆண்டு இந்தியவிற்கு அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் எளிதானதாக இருக்காது. தொடரை கைப்பற்ற இந்தியா கடுமையாக போராட வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக எனது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்துவேன் என வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன் சவால் விட்டுள்ளார்.

இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது “எனது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதற்காக முழு திறமையையும் வலுப்படுத்தி கொள்ள எனது உடல் ஒத்ததுழைக்கும் என நம்புகிறேன்.

எனது இலக்கை அடைவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளேன். தற்போது எனக்கு 29 வயதுதான் ஆகிறது. எனக்கு போதுமான அளவுக்கு நேரம் இருக்கிறது. அடுத்த வருடம் இதே சமயத்தில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவேன் என்று நம்புகிறேன்’’ என்றார்.