இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்நாள் ஆட்டம் நிறைவு!

WestIndiesjpg
WestIndiesjpg

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடி வரும் இலங்கை அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவு வரை 3 விக்கட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காது 132 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன் 13 வது டெஸ்ட் சதத்தையும் பூர்த்தி செய்தார்.