மூன்றாம் நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது!

spt01
spt01

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இறுதி பாதியுடன் சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இன்றைய (23) மூன்றாம் நாள் தேநீர் இடைவெளிக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்களை எடுத்திருந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் இலங்கையை விட 162 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.

ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய மற்றும் தனஞ்சய சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் பகிர்ந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் சார்பில் கைல் மேயர்ஸ் 62 பந்துகளில் 45 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார்.

சீரற்ற காலநிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டபோது துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஜோசுவா டி சில்வா 70 பந்துகளை எதிர்கொண்டு 11 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மூன்றாம் நாள் இன்றைய தினத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி, 3 விக்கெட்டுகளை இழந்து தமது முதல் இன்னிஸுக்கான மேலும் 111 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 386 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 147 ஓட்டங்களைப் பெற்றதோடு, பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் தனஞ்சய சில்வா ஆகியோரும் அரைச் சதங்களைப் பெற்று இன்னிங்ஸை பலப்படுத்தினர்.