ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் மாதம் ஆரம்பம்

Ipl cup
Ipl cup

2020 ஆம் ஆண்டுக்கானஐ.பி.எல். போட்டிகள் எதிர்வரும்மார்ச் 29 ஆம்திகதி ஆரம்பமாகவுள்ள து.

கடந்த 10 ஆண்டுகள் இடம்பெற்றுள்ள இந்தத் தொடரில், இறுதியாக கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வருடத்திற்கான (2020) போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது.

அவுஸ்ரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ‘ருவென்டி 20’ தொடரின் கடைசி போட்டி மார்ச் 29 ஆம் திகதி முடிவடைகிறது.

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மார்ச் 31 ஆம் திகதிதான் முடிவடைகிறது.

இதனால் ஐ.பி.எல்.தொடரின் ஓரிருபோட்டிகளை அவுஸ்திரேலிய, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து வீரர்கள் பங்குபற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.