இலங்கைக் குழாம் அறிவிப்பு

5fa0212c246747eec489dd5a0392396c XL
5fa0212c246747eec489dd5a0392396c XL

இலங்கை அணி இவ்வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்து 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் விளையாடவுள்ளது.

இதற்கான இலங்கை அணிநேற்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.

லசித்மாலிங்க தலைமையிலான இந்தக்குழாத்தில் 16 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கை அணி இறுதியாகப் பங்கேற்ற அவுஸ்திரேலிய விஜயத்துக்கான அணியில் இருந்து இருமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்தவாரம் பயிற்சியின் போது உபாதைக்குள்ளான வேகப்பந்து வீச்சாளரான நுவன்பிரதீப்புக்கு பதிலாக கசுன்ராஜித இலங்கைகுழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் விஜயத்தில் சிறப்பாக செயற்பட்ட ஷெஹான்ஜயசூரியவுக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதுடன் அவருக்குப் பதிலாக தனஞ்சய டி சில்வா பெயரிடப்பட்டுள்ளமை இலங்கைரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

18 மாதங்களின் பின்னர் இலங்கை இருபதுக்கு இருபது குழாத்தில் அஞ்சலோமத்யூஸ் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர் இறுதியாக 2018 ஏப்ரல் மாதம் தென்ஆபிரிக்காவுக்கு எதிராக சர்வதேச இருபதுக்கு இருபது போட்டியில் விளையாடியுள்ளார்.

இந்திய அணிக்கெதிரான இலங்கை குழாம் பின்வருமாறு

01.லசித்மாலிங்க (அணித்தலைவர்)

02.தனுஷ்ககுணதிலக

03.அவிஷ்கபெர்னான்டோ

04.அஞ்சலோமத்தியூஸ்

05.தசுன்சானக

06.குசல்ஜனித்பெரேரா

07.நிரோஷன்டிக்வெல்ல

08.தனஞ்சயடிசில்வா

09.இசுருஉதான

10.பானுகராஜபக்க்ஷ

11.ஓஷதபெர்னாண்டோ

12.வணிந்துஹசரங்க

13.கசுன்ராஜித

14.லஹிருகுமார

15.குசல்மெண்டிஸ்

16.லக்சன்சண்தகன்