இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் நாள் ஆட்டம் நிறைவு!

west indies 1
west indies 1

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக நிலவிய சீரற்ற வானிலை காரணமாக குறித்த போட்டியான திட்டமிட்ட நேரத்தை விட 5 மணித்தியாலங்கள் தாமதமாகி ஆரம்பிக்கப்பட்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலாம் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 113 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதேவேளை, இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக அறிமுக வீரரான சரித் அசலங்க அழைக்கப்பட்டுள்ள நிலையில், துஷ்மந்த சமீரவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் வீரசாமி பெருமாள், ஷாய் ஹோப், கெமார் ரோச் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.