இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையினால் தடைப்பட்டது

west indies 1
west indies 1

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழைக்காரணமாக தடைப்பட்டது.

போட்டியில் தமது முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆட்டம் இடைநிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஒரு விக்கெட்டை இழந்து 69 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக போட்டியில் தமது முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்சமாக 73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.