ஆஷஸ் தொடரின் 5வது போட்டி இன்று

ashesh
ashesh

இங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 5-வது ஆட்டம் இன்று லண்டனில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தொடரை சமன் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் அவுஸ்ரேலிய அணியும் களமிறங்கவுள்ளது.

இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் அவுஸ்ரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

அவுஸ்ரேலிய அணி தொடரைக் கைப்பற்றும் பட்சத்தில் 2001ஆம் ஆண்டின் பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றிய அணியாக விளங்கும். இறுதியாக 2001ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் அவுஸ்ரேலிய அணி 4-1 என தொடரைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை முடிந்துள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே இங்கிலாந்து வெற்றி கண்டுள்ளது. எனவே கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி சில மாற்றங்களுடன் தனது சொந்த மண்ணில் விளையாடவுள்ளது.