இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் நியூஸிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல், முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தலான பந்து வீச்சை பெறுதியை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் மும்பை கிரிக்கெட் கழகத்தின் அருங்காட்சியகத்திற்கு நியூஸிலாந்து சாதனை வீரரான அஜாஸ் பட்டேல், தான் பயன்படுத்திய ஜேர்ஸி மற்றும் பந்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இந்த பந்தும் ஜெர்ஸியும் மும்பை கிரிகெட் கழகத்தின் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.