தம்புள்ளை ஜயன்ட்ஸ் மற்றும் கண்டி வோரியர்ஸ் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டியில் தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து 191 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய கண்டி வோரியர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.