கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் காலி க்ளேடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான லங்கா ப்ரிமியர் லீக் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய காலி க்ளேடியேட்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்று கொண்டது.
துடுப்பாட்டத்தில் காலி க்ளேடியேட்டர்ஸ் அணி சார்பாக பென் டன்க் அதிகபட்சமாக 38 ஓட்டங்களைப் பெற்று கொடுத்தார்.
பதிலளித்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.
அந்த அணி சார்பாக தினேஸ் சந்திமால் ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களைப் பெற்று கொடுத்தார்.