லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.
கொழும்பு ஆர் பிரேமதாஸ சர்வதேச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ள முதல் போட்டியில் தம்புள்ளை ஜயன்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
அதேநேரம், இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ள இரண்டாவது போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் கண்டி வொரியஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.