பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஆலோசகராக, இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தின் பதவிக் காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் – நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்.
ரங்கன ஹேரத் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக, கடந்த இருபது -20 உலக கிண்ணத் தொடர் வரை பதவி வகித்தார்.