மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்கு சிம்பாப்வே சென்றிருந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் இன்று காலை நாடு திரும்பியுள்ளது.
இந்த தொடாில் பங்கேற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் 7 பேருக்குக் கொவிட் தொற்று உறுதியாகியிருந்தது.
இந்நிலையில், இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமை நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது.
இதனையடுத்து, அங்கு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமினர் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்.
இத்தொடரில் பங்கேற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் வீரர்கள் 6 பேருக்கும், பணிக்குழாம் உறுப்பினர் ஒருவருக்குமே இவ்வாறு கொவிட் தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.