லங்கா பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி, கண்டி வொரியஸ் அணியை 7 விக்கெட்டுக்களால் வெற்றிக்கொண்டுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
மழை காரணமாக போட்டி இடைக்கிடையே பாதிக்கப்பட்டிருந்தது.
முதலில் துடுப்பாடிய கண்டி வொரியஸ் அணி 12.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 94 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மீண்டும் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், டக்வத் லூயிஸ் முறையின் அடிப்படையில், 10 ஓவர்களில் 95 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 8.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றியிலக்கை கடந்தது.