ஆஸஷ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஜோஸ் ஹசல்வூட் விலகியுள்ளார்.
அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக குறித்த போட்டியில் இருந்து இடைவிலகியுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
காயம் காரணமாக முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் 14 ஓவர்களை மாத்திரமே அவர் வீசியிருந்தார்.
இந்நிலையில், ஜோஸ் ஹசல்வூட் நேற்றைய தினம் சிட்னிக்கு திரும்பியுள்ளதுடன், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவருக்கு பதிலாக மைக்கல் நேசர் மற்றும் ஜேய் ரிட்ஷட்சன் ஆகியோரில் ஒருவர் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு அவுஸ்திரேலிய அணியில் இணைத்துக்கொள்ளப்படுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.