கொழும்பு ஸ்டார்ஸ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி!

roja 1589643209 3
roja 1589643209 3

லங்கா ப்ரீமியர் லீக் தொடரில், கண்டி வொரியர்ஸ் அணியுடன் இடம்பெற்ற போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி வொரியஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.

இதையடுத்து, 147 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.