தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர்: இந்திய பந்துவீச்சாளர்கள் ஜொலிப்பார்கள் – புஜாரா

202112191525052890 I hope fast bowlers can give us 20 wickets in every Test SECVPF
202112191525052890 I hope fast bowlers can give us 20 wickets in every Test SECVPF

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 26 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 26 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.

மும்பையில் 3 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்த இந்திய வீரர்கள் தென்ஆப்பிரிக்கா சென்றதும் அங்கு ஒரு நாள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள் இன்று தங்களது பயிற்சியை தொடங்கினர்.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் வீரர் புஜாரா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

எங்கள் வேக பந்துவீச்சாரளர்கள் தான் எங்கள் பலம். குறிப்பாக அயல் நாடுகளில் சமீப காலங்களில் அவர்கள் சிறப்பாக
செயல்பட்டுள்ளனர். நிச்சயம் மீண்டும் இந்த முறை அவர்கள் ஜொலிப்பார்கள். தென்னாபிரிக்க ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப அவர்கள் பந்துவீசுவர்கள். ஒரு போட்டியின் 20 விக்கெட்களையும் எங்கள் வேகப்பந்துவீச்சாளர்களே பெற்றுத்தரும் அளவுக்கு அவர்கள் திறமை கொண்டவர்கள்.

ஆஸ்திரேலியா தொடரிலும் சரி , இங்கிலாந்து தொடரிலும் சரி எங்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வரலாற்று வெற்றியை பெற்றுத்தந்துள்ளனர் . அதுவே இந்த தொடரிலும் எதிரொலிக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார் .