முத்துவெல் கிரிக்கெட் கழகம் நடத்திய சம்பியன் தொடரில் கிண்ணத்தை வென்றது முத்துவல் பிளாட்டினம்

aishwarya rai bachchan 1522138799 1
aishwarya rai bachchan 1522138799 1

முத்துவல் கிரிக்கெட் கழகம் நடாத்திய டி-20 கிரிக்கெட் தொடர் ஒன்றின் இறுதிப்போட்டியில் கொழும்பு, முத்துவெல்  பிளாட்டினம் அணி 22 ஓட்டங்களினால் வெற்றி பெற்று சம்பியன் ஆகியுள்ளது.

கொழும்பு முத்துவல் கிரிக்கெட் கழகம் நடத்திய முத்துவெல் கிரிக்கெட் என்கவுன்டர் கிண்ணத்துக்கான தொடரில் மொத்தமாக நான்கு அணிகள் பங்கெடுத்தது.

நேற்றைய தினம் நடைபெற்ற இதன் இறுதிப் போட்டியில் கொழும்பு, முத்துவெல் பிளாட்டினம் மற்றும் கொழும்பு முத்துவல் மெரூன் அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற முத்துவெல் மெரூன் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய முத்துவல் பிளாட்டினம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களை குவித்தது. 

அணி சார்பில் அதிகபடியாக தனஞ்சய 61 ஓட்டங்களையும், தர்ஷிகாந்த்  37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் முத்துவல் மெரூன் சார்பில் ராகுல் 2 விக்கெட்டுகளையும், அகாஸ், அசேன் மற்றும் அக்ஷர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் 120 ஓட்டங்களில் 186 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட முயன்ற முத்துவெல் மெரூன் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.

பந்து வீச்சில் முத்துவெல் பிளாட்டினம் சார்பில் அணித் தலைவர ்குமரேசன் 4 விக்கெட்டுகளையும், துஷாந்தன் 2 விக்கெட்டுகளையும், சரூபான் மற்றும் டிலான் ஆகியோர் தமது பங்கிற்கு தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபடியாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அசேன் 43 ஓட்டங்களையும், தினேஷ் 33 ஓட்டங்களையும், கிஷோர் 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்த முடிவுகளின் அடிப்படையில் 22 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற முத்துவெல் பிளாட்டினம் அணி சாம்பியன் ஆனது.

போட்டியின் சிறந்த பந்து வீச்சாளராகவும், தொடரின் சிறந்த பந்து வீச்சாளராகவும் முத்துவெல் பிளாட்டினம் அணியின் தலைவர் குமரேஷன் தெரிவானார்.

அதேநேரம் போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக தனஞ்சயவும், தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக இத் தொடரில் பங்கெடுத்த மற்றொர் அணியான முத்துவெல் சில்வரின் வீரர் கே. வேலு தெரிவானார்.