அவுஸ்திரேலியா அணி 275 ஓட்டங்களால் வெற்றி!

202012301607034344 Tamil News New Zealand Leapfrog Australia To Claim The ICC No1 Test SECVPF
202012301607034344 Tamil News New Zealand Leapfrog Australia To Claim The ICC No1 Test SECVPF

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 275 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அடிலெயிட் ஓவல் விளையாட்டு திடலில் இடம்பெற்ற இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலாவது இன்னிங்சில் 473 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 230 ஓட்டங்களையும் பெற்றது.

இங்கிலாந்து அணி, முதலாவது இன்னிங்சிற்காக 236 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சிற்காக 192 ஓட்டங்களையும் பெற்றது.

ஐந்து போட்டிகளை கொண்ட ஆஷஸ் போட்டியின் முதல் இரு போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டிற்கு பூஜ்யம் என்ற நிலையில் அவுஸ்திரேலியா உள்ளது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி மெல்போன் மைதானத்தில் ஆரம்பமானது.