பங்களாதேஷூக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணியின் தலைவராக டொம் லதம் தெரிவு!

21 617d435d522db 4
21 617d435d522db 4

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூஸிலாந்து அணியின் தலைவராக டொம் லதம் பெயரிடப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸனுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவருக்கு பதிலாக டொம் லதம் நியூஸிலாந்து அணியை வழிநடத்தவுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாம் போட்டியில் டொம் லதம் நியூஸிலாந்து அணியை வழிநடத்தியிருந்தாலும், முழுமையான தொடருக்கு அவர் தலைவராக செயற்படவுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

பங்களாதேஷ் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.