14 நாள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் பங்களாதேஷ் அணியில் இணைந்தார் ஹேரத்!

21 61c89041c5753 1
21 61c89041c5753 1

பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சு ஆலோசகர் ரங்கன ஹேரத் தனது 14 நாள் தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்டு நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அணியில் சேர அனுமதிக்கப்பட்டுள்ளார்.

43 வயதான ஹேரத் நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டதன் பிறகு கொவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்தார். 

அவரைத் தவிர, வீரர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் அடங்கிய டெஸ்ட் அணியின் மற்ற எட்டு உறுப்பினர்களும் மலேசியாவிலிருந்து நியூசிலாந்துக்கு விமானத்தில் செல்கையில் கொவிட்-19 தொற்று நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், நீட்டிக்கப்பட்ட தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந் நிலையில் ஹெரத் குணமடைந்து, தனது 14 நாள் தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்டு நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அணியில் சேர அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஹேரத் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில்,

நான் மீண்டும் குழுவுடன் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதே சமயம் இரண்டுவார தனிமைப்படுத்தல் எனக்கு கடினமாக இருந்தது, ஆனால் நான் திரும்பி வந்து சுற்றுப்பயணத்தை எதிர்நோக்கியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதேநேரத்தில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தின் வைத்தியர்கள் குழாம் என்னை நன்றாக கவனித்துக்கொண்டதால் நான் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார்.

பங்களாதேஷ் வீரர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்ட பிறகு தொடர் நடைபெறுவது குறித்து சந்தேகம் எழுந்தது. இருப்பினும், டிசம்பர் 21 அன்று வீரர்களும், உறுப்பினர்களும் கொவிட் தொற்று தொடர்பில் எதிர்மறையான முடிவுகளை வெளிப்படுத்தினர்.

இதனால் வீரர்கள் மீண்டும் பயிற்சியைத் தொடங்க அனுமதிக்கப்பட்டனர்.

பங்களாதேஷ் அணி தற்போது தவுரங்காவில் தங்களின் கடைசி கட்ட ஆயர்த்த பணிகளில் உள்ளது மற்றும் நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிராக டிசம்பர் 28-29 திகதிகளில் இரண்டு நாள் ஆட்டத்தில் விளையாடவுள்ளது.

தொடக்க டெஸ்ட் போட்டி டவுரங்காவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் ஜனவரி 1 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் ஜனவரி 9 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.