ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு திமுத் கருணாரத்ன பரிந்துரை!

1600x960 155486 lizardfb 1
1600x960 155486 lizardfb 1

ஐசிசியின் 2021 ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நால்வரில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த விருதுக்கு இங்கிலாந்தின் டெஸ்ட் அணித்தலைவர் ஜோ ரூட், நியூசிலாந்தின் கெய்ல் ஜேம்சன் மற்றும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

திமுத் கருணாரத்ன இந்த ஆண்டு 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் உட்பட 902 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் இந்த விருதை இதற்கு முன்னர் இலங்கை சார்பாக குமார் சங்கக்கார மட்டுமே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.