19 வயதுக்குட்பட்ட இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி நிறுத்தம்!

7c8229eb529404dd5495bc523567faca XL
7c8229eb529404dd5495bc523567faca XL

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

போட்டி நடுவர்கள் இருவருக்கு கொவிட் தொற்று உறுதியானதை அடுத்து, இந்த தீர்மானம எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி இடைநிறுத்தப்பட்டபோது 19 வயதுக்கு உட்பட்ட பங்களாதேஷ் அணி  4 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இடைநிறுத்தப்பட்ட போட்டிகளை, மீள நடத்தும் திகதி தொடர்பில் இன்னமு் இறுதி முடிவு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.