தோனியின் சாதனையை முறியடித்தார் ரிஷப்!

rishabpant 1621598461
rishabpant 1621598461

இந்திய அணி  3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் விக்கெட் காப்பாளரான ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் காப்பாளராக பிடியெடுப்பு மற்றும் ஸ்டம்பிங்  மூலம் 101 முறை  (93 பிடியெடுப்புகள் மற்றும் 8 ஸ்டம்பிங்) ஆட்டமிழப்புகளை செய்துள்ளார்.

அவர் இந்த  சாதனையை 26 டெஸ்ட் போட்டிகளில் செய்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான எம்.எஸ் தோனி 36 போட்டிகளில் இச்சாதனையை படைத்துள்ளார்.

இந்நிலையில், குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்த இந்திய விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் தனதாக்கிக்கொண்டுள்ளார்.