ஆஷஸ் தொடரின் போட்டி நடுவர் டேவிட் பூனுக்கு கொவிட்-19 தொற்று!

21 60de79d26adc1 1
21 60de79d26adc1 1

அவுதிரேலியாவில் நடந்து வரும் ஆஷஸ் தொடருக்கான நியமிக்கப்பட்ட போட்டி நடுவரான டேவிட் பூன் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இதனால் அவர்  ஜனவரி 5 ஆம் திகதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் கடமையாற்றுவதற்கான வாய்ப்பினை தவறவிட்டுள்ளார்.

அந்த போட்டியில் டேவிட் பூனுக்கு பதிலாக ஸ்டீவ் பெர்னார்ட் நியமிக்கப்படுவார்.

டிசம்பர் 29 அன்று 61 வயதை எட்டிய பூன் கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளார்.

எவ்வாறெனினும் தற்சமயம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள பூன் மாநில அரசாங்கத்தின் சுகாதார வழிகட்டல்களுக்கு இணங்க 10 நாட்கள் மெல்போர்னில் தனிமைப்படுத்தலில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.