இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி!

1642754734 1642745771 dasun2
1642754734 1642745771 dasun2

இலங்கை மற்றும் சுற்றுலா சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இப்போட்டித் தொடரில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றுள்ளன.

இதற்கமைய, இன்றைய போட்டியில் வெற்றிப் பெறும் அணி தொடரை கைப்பற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.