விராட் கோலியை பின்தள்ளுவாரா ரோஹித் ஷர்மா?

121209704 viratkohlirohitsharmagettyimages 841191728
121209704 viratkohlirohitsharmagettyimages 841191728

இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

கொல்கத்தாவில், இரவு 7.30 க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில், இதுவரையில் இடம்பெற்ற 17 இருபதுக்கு 20 போட்டிகளில், இந்திய அணி, 10 போட்டிகளிலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி, 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

இதேவேளை, இருபதுக்கு 20 போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ள விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு இடையே, 30 ஓட்டங்கள் மாத்திரமே வித்தியாசமுள்ளது.

3, 227 ஓட்டங்களுடன், விராட் கோலி இரண்டாம் இடத்திலும், 3, 197 ஓட்டங்களுடன் ரோஹித் ஷர்மா மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

நியூஸிலாந்து அணி வீரர் மார்டின் கப்டில், 3,299 ஓட்டங்களுடன், முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.