கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் – புதிய சாதனை

ronaldo
ronaldo

போர்த்துக்கல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோலில் புதிய சாதனைப் படைத்துள்ளார்.

இவர் தற்போது இத்தாலியில் உள்ள யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

நேற்று யுவென்டஸ் – காக்லியாரி அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் ஹட்ரிக் கோல் பதிவு செய்ததன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்த ஹட்ரிக் கோல் மூலம் கால்பந்தில் 10 வெவ்வேறான தொடர்களில் ஹட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அவர் யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக், யூரோப்பியன் நேஷன்ஸ் லீக், உலக கோப்பை, கிளப் உலக கோப்பை, கோபா டெல் ரே, யூரோ தகுதிச் சுற்று, உலக கோப்பை தகுதி சுற்று, லா லிகா, பிரிமீயர் லீக், செர்ரி ஏ தொடர்களில் ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.