ஆண்டின் முதலாவது தொடர் இந்தியா வசம்!

IND vs SL
IND vs SL

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான T20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தீர்மானித்த இலங்கை அணி இந்தியாவை துடுப்பெடுத்தாட பணித்திருந்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் ஷிகார் தவான் 52 ஓட்டங்களையும் மற்றும் கே.எல் ராகுல் 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 57 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் நவ்தீப் சைனி 3 விக்கட்டுக்களையம், ஷர்துள் தாக்கூர், வொஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினர்

ஆட்டநாயகனாக ஷர்துல் தாக்கூரும், தொடராட்ட நயகனாக நவ்தீப் சைனியும் தெரிவு செய்யப்பட்டனர்.