மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!

286521
286521

அயர்லாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க மேற்கிந்திய தீவுகள் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரன் பொலார்ட் தலைமையிலான இந்த அணியில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான டுவைன் பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார்.

பிராவோ, இறுதியாக 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ரி-20 போட்டியில் விளையாடினார். அதன்பின் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை.

கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

எனினும், அவரது வெளிநாட்டு ரி-20 லீக் தொடரில் வெளிப்படுத்திய திறமையை கருத்திற் கொண்டு அவர் மீண்டும் அணிக்கு உள்வாங்குவது குறித்து சிரேஷ்ட வீரர்களுடன் கிரிக்கெட் சபை பேச்சுவார்த்தை நடத்தியது. அத்தோடு அவரதும் இது குறித்து தீர யோசித்தார்.

இதன்பிறகு, அணியின் நலன் கருதியும், எதிர்வரும் ரி-20 உலகக்கிண்ண தொடரை எதிர்பார்த்தும், மீண்டும் ரி-20 அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்தார்.

அணி விபரம் பின்வருமாரு

கிரன் பொலார்ட் தலைமையிலான அணியில், டுவைன் பிராவோ, செல்டோன் கொட்ரெல், சிம்ரொன் ஹெட்மியர், பிரெண்டன் கிங், எவீன் லிவீஸ், கெர்ரி பியர், நிக்கோலஸ் பூரான், ரொவ்மன் பவல், ஷெர்பேன் ருத்தர்போர்ட், லெண்ட்ல் சிமொன்ஸ், ஹெய்டன் வோல்ஷ், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடுகின்றது.