முத்தரப்புத் தொடரில் பங்களாதேஸ் அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

mohammed nabi
mohammed nabi

பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் பங்களாதேசில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஸ் அணியை 25 ஒட்டங்களால் வீழ்த்தியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பாக மொஹமட் நபி ஆட்டமிழக்காது 84 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 19.5 ஓவர்களில் 135 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 25ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆட்டநாயகனாக மொஹமட் நபி தெரிவு செய்யப்பட்டார்.