அயர்லாந்து திரில் வெற்றி!

ire vs wi
ire vs wi

அயர்லாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டியில் அயர்லாந்து அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 20 ஓவர் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அயர்லாந்து சார்பில் போல் ஸ்டிர்லிங் 95 ஓட்டங்களையும், கெவின் ஓ பிரைன் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் செல்டன் கொட்ரல், பியர்ரி, டுவைன் பிராவோ தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஒவர் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 204 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

மேற்கிந்திய தீவுகளின் துடுப்பெடுத்தாட்டத்தில் லூயுிஸ் 53 ஓட்டங்களையும், பொலார்ட் ஓட்டங்களையும், ஹெட்மையர் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் யொசுவா லிட்டடில் 3 விக்கட்டுக்களையும், கிரைக் ஜங் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக போல் ஸ்டிர்லிங் தெரிவு செய்யப்பட்டார்.