வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து அணி

rsa vs eng 3
rsa vs eng 3

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

தென்னாபிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி தனது முதல் இன்னிங்சில் 9 விக்கட் இழப்பிற்கு 499 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இங்கிலாந்து சார்பில் ஓ.ஜே.பொப் 135 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 120 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

தென்னாபிரிக்க பந்துவீச்சில் கேசவ் மஹராஜ் 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

தென்னாபிரிக்கா தனது 2வது இன்னிங்சில் 209 ஓட்டங்களுக்க சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் குயின்டன் டீ கொக் 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் டி.எம்.பெஸ் 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

மீண்டும் தென்னாபிரிக்க அணியை துடுப்பெடுத்தாடுவதற்கு பணிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தென்னாபிரிக்க அணி தனது 2வது இன்னிங்சில் நேற்றைய 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 102 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இன்றை 5ம் நாள் ஆட்டத்தில் மீதமுள்ள 4 விக்கட்டுக்களையும் இங்கிலாந்து அணி கைப்பற்றும் பட்சத்தில் போட்டியை வெற்றி கொள்ளும்.