இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு!

sl vs wi
sl vs wi

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின், போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 10ஆம் திகதி இலங்கை வரவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள், இரண்டு T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இச்சுற்றுப்பயணத்தில் முதலாவது ஒருநாள் போட்டி பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி, இரண்டாவது போட்டி 26ம் திகதி, மூன்றாவது போட்டி மார்ச் 1ம் திகதி நடைபெறவுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி மார்ச் மாதம் 4ஆம் திகதியும், இரண்டாவது T20போட்டி 6ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.