06 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி

ire vs netherland
ire vs netherland

அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையில் முத்தரப்பு T20 கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது.

அயர்லாந்து மற்றும் நெதர்லாந்திற்கிடையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து அணி அயர்லாந்து அணியை 06 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 7 விக்கட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 182 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 19.1 ஓவர்களில் 183 ஓட்டங்களைப் பெற்று 06 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது,

ஆட்டநாயகனாக ஆட்டமிழக்காது 91 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பென் கூப்பர் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியுடன் 5 புள்ளிகளைப் பெற்று நெதர்லாந்து அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ளது. எனினும் அயர்லாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது,