சிம்பாவேயை வீழ்த்தியது பங்களாதேஸ் அணி

bang vs zim
bang vs zim

பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் பங்களாதேசில் நடைபெற்று வருகிறது.

பங்களாதேஸ், சிம்பாவே அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் பங்களாதேஸ் அணி 39 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 7 விக்கட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பாக மஹமதுல்லா ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 136 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆட்டநாயகனாக மஹமதுல்லா தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியுடன் பங்களாதேஸ் அணி 3போட்டிகளில் 2இல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ளது. இந்த தோல்வியுடன் சிம்பாவே அணி இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கான வாய்ப்பினை இழந்துள்ளது. இத்தொடரில் சிம்பாவே அணிக்கு ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்னுமொரு போட்டி எஞ்சியுள்ளது.