நியூஸிலாந்தை வீழ்த்திய இந்தியா!

ind vs nz 2020
ind vs nz 2020

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதாவது T20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி இருபது ஓவர் நிறைவில் 5 விக்கட் இழப்பிற்கு 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து சார்பில் கொலின் மன்ரோ 59 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் 54 ஓட்டங்களையும், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது.

இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் 56 ஓட்டங்களையும், ஸ்ரேயஸ் ஐயர் 58 ஓட்டங்களையும், அணித்தலைவர் விராட் கோலி 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஆட்டநாயகனாக ஸ்ரேயஸ் ஐயர் தெரிவுசெய்யப்பட்டார்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.