அகில தனஞ்சய பந்துவீச தடை!

akila
akila

காலியில் நடைபெற்ற இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பின்னர் இப்போட்டியின் அதிகாரிகளால் நியூஸிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், இலங்கை அணியின் பந்துவீச்சாளர் அகில தனஞ்சய ஆகியோரின் பந்துவீச்சுப் பாணி குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

அன்றிலிருந்து 14 நாட்களுக்குள் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணி தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை பரிசோதனை நடத்தியிருந்தது.

பரிசோதனையின் முடிவில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவுக்கு ஒருவருடம் பந்துவீச சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.

இதேவேளை அகில தனஞ்சய விதிமுறைகளின் 4.5 வது பிரிவுக்கு இணங்க அவரது பந்துவீச்சு நடவடிக்கைகளை மாற்றிய பிறகு மீண்டும் மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என ICC மேலும் தெரிவித்துள்ளது.