தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!

south africa england cricket cbfa0d68 4119 11ea bfa0 35d85fc987f6
south africa england cricket cbfa0d68 4119 11ea bfa0 35d85fc987f6

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 191 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

ஜோகனஸ்பெர்க் மைதானத்தில் கடந்த 24ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 400 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஸெக் கிரெவ்லி 66 ஓட்டங்களையும், ஜோ ரூட் 59 ஓட்டங்களையும், ஒல்லி போப் 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், என்ரிச் நோட்ஜே 5 விக்கெட்டுகளையும், வெர்னொன் பிளெண்டர் மற்றம் டேன் பெட்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பியுரன் ஹென்ரிக்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 183 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, குயிண்டன் டி கொக் 76 ஓட்டங்களையும், டுவைன் பிரிடோரியஸ் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், மார்க் வுட் 5 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சேம் கர்ரன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து, 217 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 248 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் தென்னாபிரிக்கா அணிக்கு 466 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஜோ ரூட் 58 ஓட்டங்களையும், டோமினிக் சிப்ளி 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், பியுரன் ஹென்ரிக்ஸ் 5 விக்கெட்டுகளையும், என்ரிச் நோட்ஜே மற்றும் டுவைன் பிரிடோரியஸ் 2 விக்கெட்டுளையும், டேன் பெட்டர்சன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 466 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 274 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 191 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ராஸ்ஸி வெண்டர் டஸன் 98 ஓட்டங்களையும், குயிண்டன் டி கொக் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், மார்க் வுட் 4 விக்கெட்டுகளையும், ஸ்டுவர்ட் பிரோட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக மார்க் வுட்டும், தொடரின் நாயகனாக பென் ஸ்டோக்சும் தெரிவு செய்யப்பட்டனர்.