டோனியின் ஆசனத்தில் எவரும் அமர்வதில்லை – யுஸ்வேந்திர சாஹல்

yuzvendra chahal india 1498105707 800
yuzvendra chahal india 1498105707 800

பேருந்தில் எம் எஸ் டோனியின் ஆசனத்தில் எவரும் அமர்வதில்லை , நாங்கள் அவறை இழந்துள்ளது போல உணர்கின்றோம் என இந்திய அணியின்சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் காணொளியொன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தலைவரின் எதிர்காலம் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியாகியுள்ள நிலையில் சாகலின் காணொளியினை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட பேருந்தின் இறுதியில் சாஹல் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார்.அவரிற்கு அருகில் ஆசனமொன்று காலியாக காணப்படுகின்றது.

ஜாம்பவான் ஒருவர் இந்த ஆசனத்தில் அமர்வதுவழமை,அவர் டோனி.தற்போது இந்த ஆசனத்தில் எவரும் அமர்வது இல்லை, நாங்கள் டோனியை இழந்தது போன்று உணர்கின்றோம் என சாஹல் பதிவு செய்துள்ளார்.

Share