புதிய விதிமுறைகள் இது தான்!

762622 premier league wallpapers 1920x1200 for mobile
762622 premier league wallpapers 1920x1200 for mobile

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் கொண்டு வரவுள்ள புதிய விதிமுறைகள் குறித்து கங்குலி கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் துவங்கவுள்ளது.

இதற்காக வீரர்கள் சிலர் இப்போதில் இருந்தே பயிற்சியில் இறங்கிவிட்டனர். பலரும் சென்னை அணியில் விளையாடவுள்ள டோனியை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான கங்குலி, இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அவர், ஐபிஎல் போட்டி தொடங்கும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணிக்கு போட்டி துவங்கும்.

புதிய விதிமுறைகள் என்றால், நோபாலுக்கு மூன்றாவது நடுவரை அணுகும் முறை அறிமுகமாகியுள்ளது. அதேபோல டெஸ்ட் போட்டியில் இருப்பதுபோன்று கன்கசன் வீரரை விளையாடவைக்கும் முறை அறிமுகமாகிறது.

போட்டியின் இடையே வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மற்றொரு வீரர் களம் இறங்கி விளையாட முடியும். ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டியை எங்கு நடத்தப் போகிறார்கள் என்ற விவாதங்களும் எழுந்தன.

ஆனால் இறுதிப் போட்டி மும்பையில் தான் நடைபெறும் எனவும் போட்டியின் அட்டவணை போட்டி, துவங்குவது என அனைத்து விவரங்களும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விரைவில் வெளியிடுவார் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.