அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸில் ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி

nadal
nadal

அவுஸ்ரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், முதல் நிலை வீரர் ஸ்பெயினின் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

கால் இறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமுடன் நேற்று (29) மோதிய நடால் 6-7 (3-7), 6-7 (4-7), 6-4, 6-7 (6-8) என்ற செட் கணக்கில் 4 மணி, 10 நிமிடம் போராடித் தோற்றார்.
மற்றொரு கால் இறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 1-6, 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் சுவிஸ் நட்சத்திரம் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவை வீழ்த்தினார்.
அரை இறுதியில் டொமினிக் தீம் – ஸ்வெரவ் மோதுகின்றனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் எஸ்டோனியாவின் அனெட் கோன்டாவெய்ட்டை வீழ்த்தினார்.

மற்றொரு கால் இறுதியில் ரஷ்யாவின் அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவாவுடன் மோதிய ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.