சிட்னி தண்டர் அணி வெற்றி!

bbl sydney thunder v melbourne stars 71c297e0 305f 11ea 866e f0adb255fbdd
bbl sydney thunder v melbourne stars 71c297e0 305f 11ea 866e f0adb255fbdd

பிக் பேஷ் ரி-20 தொடரின் வெளியேற்றுப் போட்டியில், சிட்னி தண்டர் அணி 57 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

ஹோபர்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், சிட்னி தண்டர் அணியும், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிட்னி தண்டர் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய சிட்னி தண்டர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, அலெக்ஸ் ஹேல்ஸ் 60 ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் போல்க்னர், கிளைவ் ரோஸ், நாதன் எலீஸ் மற்றும் ஸ்கொட் போலண்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 198 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியால், 18.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், சிட்னி தண்டர் அணி 57 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் சிட்னி தண்டர் அணி நொக் அவுட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நொக் அவுட் இறுதிப் போட்டியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஷோர்ட் 37 ஓட்டங்களையும், சிமோன் மிலேன்கோ 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிட்னி தண்டர் அணியின் பந்துவீச்சில், ஜோனாதன் குக் 4 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோறிஸ் 3 விக்கெட்டுகளையும், டேனில் சேம்ஸ் 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் ட்ரீமெய்ன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.