ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

newzeland
newzeland

இந்தியாவுடனான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ரி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி விபரம்,

கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), ஹமிஷ் பென்னெட், டாம் பிளன்டெல், கொலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், கைல் ஜேமிசன், ஸ்காட் குகலின், டாம் லாதம், ஜிம்மி நீசம், ஹென்றி நிக்கோல்ஸ், மிட்செல் சான்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌத்தி, ரோஸ் டெய்லர்.