ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது சிம்பாவே

zimbabwe
zimbabwe

பங்களாதேஸில் நடைபெற்று வருகின்ற முத்தரப்பு T20 கிரிக்கெட் தொடரில் இன்று சிம்பாவே, ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சிம்பாவே அணி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பாக ரஹ்மனுல்லா குர்பக் 61 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் கிரிஸ் மோபு 30 ஒட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 19.3 ஒர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக கிரிஸ் மோபு தெரிவு செய்யப்பட்டார்.

அடுத்த போட்டி பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் 21ஆம் திகதியும், இறுதிப்போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி டாக்காவிலும் இடம்பெறவுள்ளது.