அயர்லாந்து திரில் வெற்றி! தொடரைக் கைப்பற்றியது

ireland
ireland

அயர்லாந்தில் நடைபெற்று வருகின்ற T20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதிக்கொண்ட இறுதி ஆட்டத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்று முத்தரப்புத் தொடரை கைப்பற்றியுள்ளது

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சினை தேர்ந்தெடுத்த ஸ்கொட்லாந்து அணி அயர்லாந்து அணியினை துடுப்பெடுத்தாடுவதற்கு பணித்திருந்தது,

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 8 விக்கட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 187 எனும் வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்களில் 185 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 01 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது

இந்த வெற்றியுடன் அயர்லாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்று முத்தரப்பு தொடரை கைப்பற்றியது.