உலக பளுதூக்கல் போட்டி – இலங்கை வீரர் புதிய சாதனை!

weight lift
weight lift

உலக பளு தூக்கல் போட்டியில் இலங்கை வீரரான இந்திக்க தஸநாயக்க மூன்று புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

தாய்லாந்தில் நடைபெற்று வரும் பளு தூக்கல் போட்டியில் 73 கிலோ கிராம் பளு தூக்கும் போட்டிகளில் கலந்துகொண்ட போதே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதன்போது அவர், ஸ்கெஷ் முறையில் 134 Kg பாரத்தையும், க்ளீன் அன்ட் ஜெக் முறையில் 164 Kg பாரத்தை தூக்கியிருந்ததுடன், மொத்தமாக 298 Kg பாரத்தைத் தூக்கி இலங்கை சார்பில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.