ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது பங்களாதேஸ்

bangladesh
bangladesh

பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது,

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 06 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 139 ஓட்டங்களை பெற்று 04 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காது 70 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்த சஹிப் அல் ஹசன் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியுடன் பங்களாதேஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலுள்ளது. இப்போட்டியின் முன்னதாக இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டி தகுதி பெற்றுள்ள நிலையில் இப்போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப்போட்டிக்கான ஒரு முன்னோடிப் போட்டியாகவே கருதப்பட்டது.

இந்நிலையில் இறுதிப்போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி டாக்காவில் இடம்பெறவுள்ளது.