தென்னாபிரிக்கா இலகு வெற்றி- தொடரை சமப்படுத்தியது

south africa
south africa

இந்திய அணி தான் இறுதியாக சந்தித்த 5 T20 தொடர்களில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக மாத்திரமே தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்தியா சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா அணி, இந்தியாவிற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடியது. முதலாவது போட்டி மழையால் தடைப்பட 2வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் தென்னாபிரிக்க அணி தொடரை சமப்படுத்தும் நோக்கிலும் இந்திய அணி தொடரைக் கைப்பற்றும் நோக்கிலும் 3வது T20 ஐ நேற்று எதிர்கொண்டிருந்தன.

இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த இந்திய அணியால் 20 ஓவர்களில் இந்தியா அணியால் 134 ஓட்டங்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 01 விக்கட்டினை மாத்திரம் இழந்து 140 ஓட்டங்களை பெற்று 09 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றது. பியூரன் ஹென்ரிக்ஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றின் மூலம் T20 தொடரானது 1-1 என சமனில் முடிந்தது.

இந்திய அணி தான் இறுதியாக சந்தித்த 5 T20 தொடர்களின் நிலவரம்

  • அவுஸ்ரேலியா 2018/2019 – 1-1 (சமம்)
  • நியூசிலாந்து 2018/2019 – 2-1 (நியூசிலாந்து)
  • அவுஸ்ரேலியா 2018/2019 – 2-0 (அவுஸ்ரேலியா)
  • மேற்கிந்திய தீவுகள் 2019 – 3-0 (இந்தியா)
  • தென்னாபிரிக்கா 2019 – 1-1 (சமம்)